செம்மொழி உள்ளும் புறமும். ஆசிரியர்: மணவை முஸ்தபா, வெளியீடு: சீதைப் பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. பக்.: 80 விலை: ரூ.40-
செம்மொழிக்காகத் தொடர்ந்து போராடியவர் மணவை முஸ்தபா. பல்வேறு அறிவியல் சொற்களை தமிழாக்கம் செய்வதில் முன்னிற்பவர். செம்மொழி குறித்து இவர் எழுதியுள்ள இந்நூல் மிகவும் முக்கியமானது. செம்மொழிக்கான 11 தகுதிகள் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவு நிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு- கலை- பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத் தனித்தன்மை, இலக்கிய வளம், கலை- இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு- பங்களிப்பு, மொழிக் கோட்பாடு என்கிற அளவு கோல்களின்படி தமிழ் செம்மொழியே என்பதை இந்நூலில் சரியாக நிறுவியிருக்கிறார். செம்மொழிக்காக நடை பெற்ற போராட்டத்தின் சாரத்தை பிழிந்து தந்திருக்கிறார். படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய நூல்.
ஏனைய செய்திகள்